இலங்கை அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்றது.

246761.3

சௌத்தேம்டனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதையடுத்து இங்கிலாந்து அணி 141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில் 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக பட்லர் 73 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும்.

Related Posts