இலங்கை அணியை இலகுவாக வென்றது நியூசிலாந்து!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

New Zealand v Sri Lanka - 1st Test: Day 4

கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை பெற்றது. பதில் அளித்த இலங்கை 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பின்னர் பொலோன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 407 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி நியூசிலாந்து அணிக்கு 105 என்ற இலகுவான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக மெக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts