இலங்கை அணியின் முகாமையாளராக அசங்க குருசிங்க நியமனம்

இலங்கை கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கட் வீரர் அசங்க குருசிங்க இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது அவர் பங்கெடுத்திருந்தார்.

தற்போது அவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிராந்திய அணிகள் சிலவற்றின் பயிற்சியாளராக செயற்பட்ட அசங்க குருசிங்க உத்தியோகபூர்வ பயிற்சியாளராக பல வருட அனுபவம் மிக்கவர் என்ற அடிப்படையில் அணியின் முகாமையாளராக நியமித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts