இலங்கை அணியின் தொடர் தோல்வியில் பல புதிய சாதனைகள்

தென்னாபிரிக்காவுடன் இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவியமையானது புதிய பல சாதனைகளை பதிவுப் புத்தகத்தில் ஏற்றியுள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான (நேற்றுமுன்தினம் (14)) நாள் ஆட்டத்தில் மாத்திரம், இலங்கை அணியின் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு நாளில் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுக்களாக கருதப்படுகின்றது.

இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் 20 உம் இந்த டெஸ்ட் போட்டியின் 529 பந்துகளில் வீழ்த்தப்பட்டுள்ளன. இது இலங்கை வரலாற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுக்கள் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நான்காவது சந்தர்ப்பம் ஆகும்.

இந்தப் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை 59 ஆகும். இதுபோன்ற ஒரு நிலைமை இலங்கை டெஸ்ட் வரலாற்றில் இடம்பெற்றது இதுவே முதல் தடவையாகும்.

ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முழுமையாக தோல்வியடைந்த ஐந்தாவது முறையாக இது கருதப்படுகின்றது.

இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ஒரு இனிங்ஸினாலும், 118 ஓட்டங்களினாலும் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியது. இது இலங்கைக்கு எதிராக தென்னாபிரிக்க அணி பெற்றுள்ள மூன்று அபாற வெற்றிகளில் ஒன்றாகும்.

Related Posts