இலங்கை அணியின் தலைவருக்கு அழைப்பாணை

இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸை நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Angelo-Mathews

காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளமை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே மெத்தியூஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட்டின் இரு ஊழியர்கள், ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்களை அணுகியுள்ளனர்.

சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரிடம் நிதி மோசடி பிரிவு நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.

Related Posts