இலங்கை அணியினர் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி பலி

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் குவரி யாசீன், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாசின், 2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் என கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அவர் மேலும் மூன்று பேருடன் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, இவர்களை இலக்கு வைத்து அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நால்வரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts