இலங்கை அணியினருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் எஞ்சலோ மத்தியுவை நேற்று முன்தினம் (30) பிற்பகல் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதோடு, இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால வெற்றிக்காகவும் தமது ஆசிகளைத் தெரிவித்தார்.

Related Posts