இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியும் இல்லை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான நேற்றய போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்​கை அணி சார்பாக தில்ஷான் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்க​ளையும் சந்திமால் 58 ஓட்டங்க​ளையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக இர்பான் 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக சர்பாஸ் அஹமட் 38 ஓட்டங்களையும் உமர் அக்மல் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related Posts