இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் மிலிந்த சிறிவர்த்தன 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதில் இலங்கை அணி சார்பில் மெத்திவ்ஸ் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 163 ஓட்டங்களை பெற்றது.மேற்கிந்திய தீவுகள் சார்பில் கே.சி. ப்ரதாவைடே 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதன்படி இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற வேண்டுமானால் இரண்டாவது இன்னிங்ஸில் 244 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது.
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன் மூலம் இலங்கை அணி 72 ஓட்டங்களால் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக ரிஎம்சிறிவர்த்தனவும், தொடரின் சிறப்பாட்டக்காரராக ஹரத்தும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகியோரின் முழுமையான ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் முதலாவது தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.