இலங்கை அகதி தற்கொலை

இந்தியாவின் இராயனூர் அகதிகள் முகாமில் இலங்கை அகதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கரூர் – ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் தர்மாகுமார் (31). இவர் ஒரு பெயிண்டராகும். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி மது அருந்துவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 15ம் திகதி குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த தர்மாகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் குறித்து பசுபதிபாளையம் பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Posts