இலங்கை அகதி தற்கொலை முயற்சி

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை முகாமில் இலங்கை அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 20 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். தங்களை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய 20 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது 8 பேர் மட்டும் முகாம் சிறையில் உள்ளனர். இவர்களில் யுகப்பிரியன் (25) என்பவர் தன்னை விடுதலை செய்யக் கோரி நேற்றுமுன்தினம் மாலை துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் என இந்திய ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி கே.கே.நகர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts