இலங்கை அகதி இந்தியாவில் தற்கொலை

தமிழ்நாட்டில் செய்யாறு அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்த இலங்கை அகதி ஒருவர் விஷம் உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமையினால் விஷம் உட்கொண்ட பெண் ஒருவர் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

41 வயதுடைய இராஜேஸ்வரி எனப்படும் பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இராஜேஸ்வரி தனது கணவரின் ஆலோசனையின்றி பலரிடம் வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமையினால், இராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் விஷம் உட்கொண்டுள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts