இலங்கை அகதிமீது ஜேர்மனியில் தாக்குதல்

ஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள 22 வயதான இலங்கை அகதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, ஜேர்மனிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது வசிப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த நபர் மீது, மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஸ் தரிப்பிடமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலில், இலங்கைப் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Related Posts