Ad Widget

இலங்கை அகதிகள் 14 பேர் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் 14 பேர் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முகாமில் தற்போது 16 இலங்கைத் தமிழர்கள், ஒரு நைஜீரியர் என 17 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மகேந்திரன் என்ற இலங்கைத் தமிழர், தன்னை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி 2 நாட்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். 3ஆவது நாளாக நேற்றும் அவரது போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப் பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, இதே முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 13 பேர் நேற்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடு பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவர்கள் அளித்த கடிதத்தை அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், அதை ஏற்க மறுத்து, 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

Related Posts