இலங்கை அகதிகள் 14பேர் இந்தியாவில் கைது

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்றபோது, குற்றப்பிரிவு பொலிஸார் 14 இலங்கை அகதிகளை கைது செய்துள்ளனர்.

இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீட்டர் டீசல் இருப்பது தெரியவந்ததால், பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அந்தப் படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை அகதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

Related Posts