Ad Widget

இலங்கை அகதிகள் குறித்த இந்தோனேஷியாவின் முடிவுக்கு சர்வதேச அமைப்புக்கள் எதிர்ப்பு

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரித்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ளன.

Tamil boat people

44 இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வேளை படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது.

அப்படகில் ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்கள் உட்பட 44 பேர் இருந்துள்ளனர்.

இவர்களை மீட்ட இந்தோனேஷிய அதிகரிகள், அவர்களுக்கு தேவையான உணவுகளையும் வழங்கி, அவர்களுடைய உடல்நிலையும் பரிசோதித்துள்ளனர்.

பின்னர் படகின் இயந்திர கோளாறு சரி செய்து மீண்டும் அவர்களை தமிழகத்துக்கே கடல்வழியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தோனேஷிய அதிகாரிகளின் அகதிகள் குறித்த இந்த முடிவை, இந்தோனேசியா மனிதாபிமானற்ற வகையில் அணுகுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதுகுறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, தங்களுடைய நாட்டுக்கு அகதிகளை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர்களை தடுத்து நிறுத்துங்கள் என்றும் இந்தோனேசிய அரசை அவுஸ்திரேலியா வற்புறுத்தி இருக்கிறது.

Related Posts