இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்பக்கூடாது

இலங்கை அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் இங்கிருந்து கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது என, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது அரசியல் களம் தெளிவாகவில்லை. தற்போது அமைந்துள்ள கூட்டணிகள் தேர்தல் நேரத்தில் மாற வாய்ப்பு உள்ளது. எனவே, கூட்டணிகள் உறுதியானதும் எங்கள் இயக்கத்தின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிவிக்கப்படும்.

இலங்கை அகதிகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் இங்கிருந்து கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக்கூடாது. மீறி, மத்திய அரசு செயல்பட்டால் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றார்.

Related Posts