இலங்கையை 32 வருடங்களின் பின் வயிட்வோஸ் செய்த பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிள்ளது.

நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

எனினும், பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை 26.2 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை வீரர்கள் 103 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

இதனையடுத்து, 104 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், 20.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 105 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீ்ட்டியுள்ளது.

இதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி, 32 வருடங்களின் பின்னர், இலங்கை அணியை வயிற்வோஸ் செய்துள்ளது பாகிஸ்தான் அணி.

Related Posts