இலங்கையை வெளுத்து வாங்கியது இங்கிலாந்து

இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

Alex Hales and Jason Roy

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும், உப்புல் தரங்க ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்பிற்கு 254 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 34.1 ஓவர்களில் 256 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜே.ரோய் 112 ஓட்டங்களையும், ஹெல்ஸ் 133 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக ஜே.ஜே. ராய் (இங்கிலாந்து) தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts