உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக 21 மற்றும் 23ம் திகதி இரு அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் இங்கிலாந்து அணி தொடரை இழந்து விடாது என கிறிஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எல்லோரும் உலகக்கிண்ணத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் இப்போது இருக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்தினால் போதுமானது.
இலங்கை சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு அடித்தளம் அமைப்போம் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு மோசமான தோல்விகளே மிஞ்சியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்த இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக 3-2 என்ற கணக்கிலும், இந்தியாவுக்கு எதிராக 3-1 என்ற கணக்கிலும் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆயத்தமாகும்