இலங்கையை சுற்றி, 1268 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடப்பதற்கான முயற்சியில், தேவிகா காசிஷெட்டி என்ற பெண் இறங்கியுள்ளார்.
தனது நடைபயணத்தைக் கடந்த 10ஆம் திகதியன்று கதிர்காமம் கிரிவேஹர விகாரைக்கு அண்மையில் ஆரம்பித்த இவர், காலி மாவட்டத்தில் உள்ள அஹங்கம நகரத்தை நேற்றுக் கடந்தார்.
தனது பயணத்தை எதிர்வரும் மே மாதத்தன்று, கதிர்காமம் கிரிவேஹர விகாரையிலேயே நிறைவு செய்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
கதிர்காமம், மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, சிலாபம், புத்தளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் அந்தப் பெண், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யால ஊடக கரையோர பாதைகளின் ஊடாக, தான் பயணிப்பதாக அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.