ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளில் இலங்கையை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.
அமெரிக்க ராஜங்க திணைக்களத்தின் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இதில், ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்கடத்தலுக்கு உட்படும் அகதிகள் இலங்கையில் இருந்தே வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அரசாங்கம் சட்ட ஒழுங்குகளில் உள்ள குறைபாடுகளே இதற்கான காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கனடாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.