இலங்கையில் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி உத்தரவு வழங்கியிருந்தார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts