இலங்கையில் 17 ஆவது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

42 வயதுடைய ஜா எல பகுதியை சேர்ந்த ஒருவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts