இலங்கை வாழும் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஒவ்வொரு 100 பேருக்கும் 12 தரைவழித் தொலைபேசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கைபேசிகளையும் சேர்த்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள் இருக்கின்றன.
அத்துடன் சிறிலங்காவின் சனத்தொகையில் 23.2 வீதமானோர் இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இவ்வறிக்கையின்படி, சிறிலங்காவில் ஒரு இலட்சம் பேருக்கு 18 என்ற அடிப்படையில், தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
2984 அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிக் கிளைகளும், 630 அனுமதி பெற்ற சிறப்பு வங்கிக் கிளைகளும் சிறிலங்காவில் இருக்கின்றன.
ஒரு இலட்சம் பேரில், 6,206 பேர் என்ற அடிப்படையில், கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு இலட்சம் பேருக்கு 17 என்ற அடிப்படையில், வங்கிக் கிளைகள் இருக்கின்றன.” என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.