இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு!

hot-sun-thermometerஇலங்கையில் இரவு மற்றும் பகல் நேர வெப்பநிலை கடந்தபல தசாப்தங்களாக படிப்படியாக அதிகரித்துவருவதாக வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மழைவீழ்ச்சியும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்துவந்த அளவிலும் பார்க்க வெகுவாக குறைந்துள்ளதாகவும் இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதனிடையே, கடந்த 7 ஆண்டுகளில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் உலக அளவில் இரட்டை மடங்காகியுள்ளமைக்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்களை ஐநாவின் நிபுணர் குழு அண்மைய ஆய்வறிக்கையில் வெளியிட்டிருந்தது.

வரும் காலங்களில் உலகில் வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பதுடன் மனித குலத்தின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு அந்த அறிக்கையில் கணித்திருந்தது.

Related Posts