இலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம்

இலங்கையில் விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வருகின்ற தேர்தல்களில் அதற்கான சாத்தியம் இல்லை எனிலும் 2020 இல் அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது

இலங்கையின் இடம்பெறும் தேர்தல்களின்போதும் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை ஏற்படுத்தினால் அதன்போது எவ்வகையான இலத்திரனியல் பாதுகாப்புக்களை மேற்கொள்வது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பணிமனையில் இடம்பெறும் கருத்தமர்விற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் லண்டன் பயணமாகின்றார்கள்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான இரட்ணஜீவன் எச் ஹூல் உள்ளிட்டோரே குறித்த கருத்தமர்விற்காக எதிர்வரும் 27ம் திகநி லண்டன் பயணிக்கின்றனர்.

இம்மாதம் 30ஆம் 31ம் திகதிகளில் இரு நாள் கருத்தமர்வாக இடம்பெறும் குறித்த கருத்தமர்வில் இலத்திரணியல் வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெறாது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முறைமைகள்  தொடர்பிலேயே பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பணிமனையில் குறித்த கருத்தமர்வு இடம்பெறவுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு பயணித்த பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் குறித்த அழைப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்ததோடு இலத்திரனியல் வாக்களிப்புமுறையினை  அறிமுகப்படுத்துவது தொடர்பில் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. –

Related Posts