இலங்கையில் முதன் முதலாக புதிய வகை எரிபொருள் அறிமுகம்

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிய எரிபொருள் வகையான யூரோ 4 (Euro 4) எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த எரிபொருளானது சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோலுக்கு பதிலாகவே யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் முதல் இந்த எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த திட்டமானது ஏற்கனவே இந்தியா மற்றும் சீனாவில் கொண்டுவரப்பட்டு அது வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts