உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார வைத்திய நிபுணர் திருமதி ஹசரெலி பெர்னாண்டோ இந்த விடயத்தை கூறியுள்ளார்
இதேவேளை மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோய்கள் பதிவாவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்