இலங்கையில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை: சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

இலங்கை அரசியலில் பெண்களுக்கான சந்தர்ப்பம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை செலுத்துபவர்கள் பெண்களாக இருக்கின்ற போதிலும், அரசியலில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில்கூட அதிகளவு பெண்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தில், மாகாண சபை தேர்தலில் பெண்களின் பங்களிப்பு 30 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts