இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாட்டில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்போர் தமது உறவினரைப் பார்க்கவோ அல்லது அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவோ வடக்குக்கு தடையின்றி செல்ல முடியும்.
அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. ஆனால் இலங்கையில் பிறக்காதவர்கள் கட்டாயம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றே வடக்குக்குப் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.