இலங்கையில் நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டிற்குத் திரும்பியிருந்த 12 பேரும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய மூவரும் இந்தியப் பிரஜைகள் இருவரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 140 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் இதுவரையில், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 162 பி.சி.ஆர் பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts