அண்மையில் பியகமவில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொடவில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியானவை. அத்துடன் இவை போன்று உலகில் எங்கும் மின்மாற்றி வெடிப்புகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.
எனவே இவை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர் இலங்கையில் சுமார் 50 வருடங்களாக பணியில் இருக்கும் பொறியியலாளர்கள் இந்த இரண்டு மின்மாற்றி வெடிப்புக்கள் போன்று உலகில் வேறு எங்கும் வெடிப்புகள் இடம்பெறவில்லை எனக் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஜேர்மனின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.