Ad Widget

இலங்கையில் தேடப்படும் தீவிரவாத குற்றவாளி கனடாவில்

சர்வதேச ரீதியாக தேடப்படும் பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

ravi-shankar-kanaka-raja

கனடாவின் (CTV) சீடிவி என்ற ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ரவிசங்கர் கனகராஜா என்ற 43 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு கடந்த 2010ம் ஆண்டு சர்வதேச பொலிஸாரினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக வடகொரியாவில் இருந்து கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்திற்காக அவருக்கு 30 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பொலிஸாரினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவிசங்கர் கனகராஜா எனக் கருதப்படும் குறித்த நபர் தற்போது கனேடிய குடியுரிமை பெற்று டொரண்டோ பகுதியில் வாழ்வதாக அவரது வழக்கறிஞர் கோப்லன் குறித்த கனேடிய தொலைக்காட்சி சேவைக்கு கூறியுள்ளார்.

ரவிசங்கர் கனகராஜா என்ற நபர் தற்போது சர்வதேச பொலிஸரின் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related Posts