இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களில் சித்திரவதைகள், குடிவரவு மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இது வரையில் தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை சித்திரவதை செய்வது ஓர் வருமானம் தரும் வர்த்தக முயற்சியாக மாறியுள்ளது என அவா சுட்டிக்காட்டியுள்ளார். 2016 அல்லது 2017ம் ஆண்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts