இலங்கையில் தனுஷ் நாயகியின் ஆனந்த குளியல்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அனேகன். அந்த படத்தில் நாயகியாக மும்பையில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் அமைரா தஸ்தூர். அந்த படத்தை அடுத்து இந்தி படங்களில் நடிக்க சென்று விட்ட அவர், மறுபடியும் சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படத்திற்காக கோலிவுட்டிற்கு வந்திருக்கிறார். இந்த முறை தமிழில் நிரந்தர நடிகையாகி விட வேண்டும் என்பதற்காக, சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சிகளை அவரை திக்குமுக்காடி வைக்கும் வகையில் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கிறார் அமைரா.

இந்த நிலையில், சென்னை வந்த அவர், இங்கு வெயில் வாட்டி எடுப்பதால், ரிலாக்ஸ் பண்ணுவதற்காக இலங்கை சென்றுள்ளார். அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து ஆனந்த குளியல் போட்டுள்ளார். அப்படி அமைரா பிகினியில் குளியல் போட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள் ளன. சமீபத்தில் தண்ணீர் தொட்டிக்குள் பிகினி அணிந்து நீந்திய கவர்ச்சி வீடியோவை இலியானா வெளியிட்டதை அடுத்து, இப்போது அமைரா தஸ்தூர் தனது பிகினி போட்டோக்களை வெளியிட்டு புதிய பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.

Related Posts