இலங்கையில் சூறாவளிக்கு வாய்ப்பு! -வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

இலங்கையில் சூறாவளி ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவி வரும் காலநிலையின் அடிப்படையில் இவ்வாறு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கடும் காற்று வீசியது. இதனால் இங்கு பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காய்ங்களுக்குள்ளாகினர்.

கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை சூறாவளி காற்றாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி தர்சன சமில் பிரேமதிலக்க தெரிவித்துள்ளார். மேகங்களுடன் மேலே அல்லது கீழே இந்தக் காற்று பலமாக வீசக்கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். மழை பெய்வதற்கு முன்னதாக கடுமையான குளிர் ஏற்படலாம், பத்து நிமிடங்கள் வரையில் பலத்த காற்று வீசலாம்.இந்த வகை மேகங்கள் காணப்படும் 3 முதல் 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு மட்டும் சூறாவளி ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

சூறாவளி காற்று தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க முடியாது என்ற போதிலும் இடி மற்றும் கடும் மழை பற்றிய எதிர்வு கூறல்கள் வெளியிடப்படும் பகுதிகளில் அவதானமாக இருப்பதன் மூலம் திடீரென ஏற்படக்கூடிய சூறாவளித் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related Posts