இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலைக்கு சீனா உதவி

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது.

நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதி பலனாகவே இந்த உதவி கிட்டியுள்ளது.

Related Posts