வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி காரணமாக சிறிய நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக பதிவு செய்து கொண்டுள்ள அனைத்து நிறுவனங்களும் வருடாந்தம் 60 ஆயிரம் ரூபாவை வரியா செலுத்த வேண்டும் என்று வரவு செலவுத்திட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கி வருகின்றன. இவற்றில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த வரி காரணமாக சிறு நிறுவனங்கள் தற்போது மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. அதன் காரணமாக அவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் தொழில் இழக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி இவ்வாறான சிறு நிறுவனங்களைச் சார்ந்து பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பல்லாயிரக்கணக்கானோர் இந்நிறுவனங்கள் மூடப்படுவதன் ஊடாக தமது வருமானத்தையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.