இலங்கையில் சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 3402 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவருடன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நபர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த பி.சிஆர் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகிய நிலையில், மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 258 ஆக காணப்படுகின்றது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 200 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts