ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா-செனெகா கோவிட்-19 தடுப்பூசி பெற்ற பின்னர் இலங்கையில் ஆறு பேருக்கு குருதிக் கட்டிகள் ஏற்பட்டமை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அவர்களில் 03 பேர் உயிரிழந்துவிட்டதாப அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளையின் கீழ் கோரிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனைத் தெரிவித்தார்.