இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனப்பெண் சிகிச்சைகளை அடுத்து குணமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பாரிய திட்டங்களில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts