இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அசேல குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts