இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதம தொற்று நோய் விசேட நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் ஊடாக கொரோனா பரலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டிற்குள் பரவ ஆரம்பித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு அது குறித்து கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 103 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts