இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

இதுத் தவிற நேற்றைய தினம் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த கடலோடி ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு இலங்கையர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை திவுலபிட்டியவில் நேற்று பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதோடு, அவரது 16 வயது மகளுக்கும் தொற்று உறுதியானது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மூவாயிரத்து 258 பேர் இதுவரையில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதேநேரம் தொற்றுக்கு உள்ளான 131 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts