உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என்று பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கண்டி, ரிக்கிலகஸ்கடையைச்சேர்ந்த பெண்ணொருவர் எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அந்த பெண்ணின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் மற்றும் உடலுறுப்புகள் என்பன பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த அந்த பெண், சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே திடீரென மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய சடலம் தாங்கிய சவப்பெட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் சுமார் எட்டு அடி குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி