இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ – கோலா (பெரரேஜஸ்) நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார்.
கொக்கோ – கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய ஆய்வுகளில் தெரிய வந்தது.
இதையடுத்தே இந்த நிறுவனத்தின் உற்பத்திக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. எனினும் சரியான ஒழுங்கு விதிகளை கொக்கோ – கோலா நிறுவனம் பின்பற்றும் சந்தர்ப்பத்தில் அனுமதிப்பத்திரம் மீள வழங்கப்படும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.