இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு!

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts