இலங்கையில் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரதன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போலியோ, சின்னம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் எயிட்ஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது என்று அமைச்சர் ராஜித சேனாரதன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.