இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள்!! மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை புதிதாக 3 ஆயிரத்து 806 பேருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3 ஆயிரத்து 793 பேர், புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன் 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டடவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 73ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றினால், மேலும் 2 ஆயிரத்து 186 பேர் நேற்று குணமடைந்தனர்.

இதற்கமைய இலங்கையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 18 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 47 ஆயிரத்து 661 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts